கண்ணாடி! ‘என்னைப் பார்த்தாலே எல்லாரும், *கண்ணாடி அழுக்கா இருக்கு!*ன்னு சொல்றாங்க. ஆனால் என்னை அழுக்காக்குறது யாருன்னு யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க!’ன்னு அது கோபமா சொல்லுது.அதைக் கேட்ட துடைப்பம் துரை உடனே,’அதான் சொல்றேன்ல! என்னையும் வாரம் ஒருமுறைதான் தேடுறாங்க!’ன்னாரு.அப்போ பிரஷ் பாலா வந்துட்டு,’என்னைப் பற்றி யாராவது பேசப் போறீங்களா? இல்ல பல் தேய்க்குற நேரத்துல மட்டும் ஞாபகம் வருவேனா?’ன்னு கேட்டார். அதற்குள் கிருமி கோபால் மெதுவா வந்து,’நீங்க எல்லாரும் சண்டை போடுங்க… நான் இங்கதான் இருக்கேன்!’ன்னு சிரிச்சான்.நான் அவனைப் பார்த்து கேட்டேன்:’கோபால், நீ எங்கிருந்து வர்றே?”சுத்தம் செய்ய மறந்த இடத்திலிருந்து!’ன்னு அவன் சொன்னான்.அந்த ஒரு பதிலில்தான் பெரிய உண்மை இருக்கு.நாம் அழுக்கு தெரிந்த பிறகுதான் சுத்தம் செய்யணும்னு நினைக்கிறோம். ஆனால் தூய்மை என்பது அழுக்கு வந்த பிறகு செய்யும் வேலை மட்டும் இல்லை; அழுக்கு உருவாகாமல் பார்த்துக்கொள்ளும் பழக்கமும் கூட.கைகளைச் சுத்தமாக வைத்தல், பயன்படுத்திய பொருட்களை அதற்குரிய இடத்தில் வைத்தல், சுற்றுப்புறத்தை அழுக்காக்காமல் இருப்பது—இவை பெரிய வேலைகள் இல்லை.ஆனால் இந்தச் சின்ன பழக்கங்கள்தான் நம்மைச் சுற்றியுள்ள இடத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.கண்ணாடி கடைசியாக ஒரு வார்த்தை சொன்னது:’என்னை தினமும் துடைக்க வேண்டாம்… உங்க பழக்கங்களை தினமும் கொஞ்சம் துடைச்சுக்கோங்க!’அடடா! கண்ணாடியே நல்ல கருத்து சொல்லுது!சரி நண்பர்களே… இந்த மாதம் இவ்வளவுதான்.அழுக்கு தெரியும்போது மட்டும் சுத்தம் செய்யாதீங்க;தூய்மை உங்கள் தினசரி பழக்கமாகட்டும்!அடுத்த மாதம் இன்னொரு புதிய சம்பவத்தோட வர்றேன்.– உங்கள் சோப் குமார்!