அம்பேத்கர் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை குழுவினர் தெரிவிக்கிறோம்
Author: Ananda Kumar
மாண்புமிகு ஆசிரியர் அவர்களுக்கும் எல்லா பத்திரிகைத்துறை ஆசிரியர்கள் அவர்களுக்கும் :
அம்பேத்காரின் சமூக விளக்கு பத்திரிகை சார்பாக ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*
சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்-110 விதியின் கீழ்… Continue reading *நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*
*ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.*
சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.தொகுதியில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரி பார்க்க வேண்டும் என்ற ஸ்டாலின் கோரிக்கையும் நிராகரிப்பு.இவிஎம் இயந்திரங்களை சோதனை செய்ததன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தலைமை நீதிபதி அமர்வு தெரிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக.. சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானம்*
தமிழை சென்னை ஐகோர்ட்டின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும். தமிழில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களுக்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும்.ஐகோர்ட்டில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது உள்பட அம்சங்களுடன் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை முன்மொழிகிறார். துணை ஆசிரியர் S.கண்ணன்
*மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு.*
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.கொளத்தூர் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*
பொதுமக்களை ஏமாற்ற சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் AI மூலம் பணமோசடி-சிபிசிஐடி.முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் இந்தி மொழியில் பரவும் போலி வீடியோக்களை நீக்க துரித நடவடிக்கை.போலி வீடியோவில் பண உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு வாட்ஸ்அப் எண்ணை கொடுத்துள்ளார்கள்.போலி வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த பேஸ்புக் ஐ.டி.களில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிபிசிஐடி.DEEP FAKE மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அறிக்கை.பொய்யான… Continue reading *முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*
*சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*
*பாதுகாப்பான மற்றும் தடையற்ற குடிநீர் விநியோகத் திட்டங்கள் ரூபாய் 4,800 மதிப்பீட்டில்.*வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் (Desalination Plant) அமைக்கப்படும்.ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த 1,000… Continue reading *சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று வெளியிட்ட அறிவிப்புகள்:*
*பெருங்கருணை கிராமத்தில் மலையில் உள்ள கோயிலில் மரகத முருகன் சிலை திருட்டு*
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*ரேஷன் கடைகளில் நாளை முதல் வெங்காயம்.*
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு. ஒரு குடும்பத்திற்கு ஒரு கிலோ வீதம் நாளை முதல் வெங்காயம் விற்கப்படவுள்ளது.