*நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்.தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்-110 விதியின் கீழ்… Continue reading *நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் உருவாக்கப்படும்- முதல்வர் விஜய்.*

*முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*

பொதுமக்களை ஏமாற்ற சமூக வலைதளங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் AI மூலம் பணமோசடி-சிபிசிஐடி.முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் இந்தி மொழியில் பரவும் போலி வீடியோக்களை நீக்க துரித நடவடிக்கை.போலி வீடியோவில் பண உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுமாறு வாட்ஸ்அப் எண்ணை கொடுத்துள்ளார்கள்.போலி வீடியோக்களை பாகிஸ்தானை சேர்ந்த பேஸ்புக் ஐ.டி.களில் இருந்து பகிரப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.குற்றவாளிகளை விரைவாக அடையாளம் கண்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சிபிசிஐடி.DEEP FAKE மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அறிக்கை.பொய்யான… Continue reading *முதலமைச்சர் விஜய் பேசுவதுபோல் பாக்.கிலிருந்து AI மூலம் மோசடி -சிபிசிஐடி.*

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

*உங்கள் மொபைல் போனை பாதுகாக்கும் சூப்பர் செயலி- தமிழக காவல்துறை விழிப்புணர்வு*

M-Kavach 2 என்பது மொபைல் பாதுகாப்பைச் சரிபார்க்க உதவும் செயலி. இதன் மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம்.சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் செயலிகளைக் கண்டறிவதுடன், Hidden / Sideloaded Apps மற்றும் Hardware-ஐயும் ஸ்கேன் செய்யலாம்.ஆப்ஸ்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கலாம்; WhatsApp / SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் பரிசோதிக்கலாம்.ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது-தமிழக காவல்துறை விழிப்புணர்வு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்