திருப்பதியில் சிறப்பு பேருந்து இயக்கம்

திருப்பதி பிரம்மோத்ஸவ திருவிழா – பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்! நமது செய்தியாளர் க.ஏழுமலை

மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு *ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு

மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? -நீதிபதி கேள்வி.* டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. மது அருந்துபவர்களால் மிகுந்த தொல்லை ஏற்படுவதாக பெரம்பூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி… Continue reading மது குடித்துவிட்டு வெளியே வருபவர்களால் மக்களுக்கு *ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதற்கு

சென்னை போக்சோ வழக்கு ஆஜர்..

சென்னை போக்சோ நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஜெம் வீரமணி ஆஜர். நமது செய்தியாளர் ச.பிரித்திவிராஜ்

நேற்று (7.10.2026) செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி

காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுடன், பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நமது இணை ஆசிரியர் இ.விஜயகுமார்

அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தில் உள்ள புதுச்சேரி கிளையில் பாதுகாவலர் இல்லை இங்கே திருட்டு போனால் யார் பொறுப்பு கிளை

மேலாளர் திரு நாகராஜன் அவர்கள் இது சம்பந்தமாக கேட்டால் நான் தற்போது சாப்பிட செல்கிறேன் என்று கூறி செல்கிறார் இது என்ன அரசு போக்குவரத்து கழக நிர்வாணமா அல்லது கிளை மேலாளர் அவர்கள் நிறுவனமா? சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் அவர்கள் மீது உயர் திரு மேலாண் இயக்குநர் அவர்கள் உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம் நன்றி தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக SC/ST பணியாளர்கள் நலச்சங்கம்… Continue reading அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தில் உள்ள புதுச்சேரி கிளையில் பாதுகாவலர் இல்லை இங்கே திருட்டு போனால் யார் பொறுப்பு கிளை

தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு.

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு. வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழக பெண்கள், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்து, அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றால் தங்க மோதிரம். உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அந்த குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம்- தமிழ்நாடு அரசு. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிரதாப் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி மெ.மெ. வீதியில் உள்ள RMR துணிக்கடை வாசல் பகுதியில் நேற்று இரவு பிரதாப் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பிரதாப் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து, அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரதாப்பை காரைக்குடி… Continue reading காரைக்குடியில் அதிர்ச்சி சம்பவம்:

ராகுல் காந்தி கைது!

டெல்லியில் போராட்டத்தில்?ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது. ராகுல் உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி எம்பிக்களை கைது செய்தது காவல் துறை. நமது இணை ஆசிரியர் மு.ஹிதாயத்துல்லாஹ்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 அறிவிப்பு வெளியானது.

மொத்தம் 6,574 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுகள் 2027 ஜனவரி 10 அன்று காலை 9.30 மணி முதல், பகல் 12.30 மணி வரை நடைபெறும். இன்று முதல், நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். பெரும்பாலான பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி. சில பணிகளுக்கு பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பணிகளுக்கு வயது வரம்பு 18 முதல்… Continue reading டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 அறிவிப்பு வெளியானது.

திருப்பதி: இன்று சிறப்பு முன்பதிவு தொடக்கம்.

திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை இன்று (அக்டோபர் 07) முன்பதிவு செய்து கொள்ளலாம். அக்டோபர் 12, 13, 14 மற்றும் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதியில் தரிசனம் செய்ய https://ttdevasthanams.ap.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலை 10 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. நமது செய்தியாளர் ப.நெடுமாறன்