வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 14.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 102* ரன்களும், இஷான் கிஷன் 37* ரன்களும் எடுத்தனர். நமது… Continue reading வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி.

இடைத்தேர்தல்: மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் பதிவான வாக்கு சதவீதம்:

மதுராந்தகம் – 85.90% (2026 பொது தேர்தல் – 93.22%) தாராபுரம் – 80.31% (2026 பொது தேர்தல் – 89.90%) தட்டாஞ்சாவடி தொகுதி (புதுச்சேரி)- 80.81% (2026 பொது தேர்தல் – 87.10%) டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

விசாரணையின்றி டாஸ்மாக் பணியாளர்களை பணிநீக்கம் செய்யக் கடாது- சென்னை உயர்நீதிமன்றம்.

மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் வந்தால், நியாயமான விசாரணை நடத்தாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது -சென்னை உயர்நீதிமன்றம். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவர் என டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் வழக்கு. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட

ஆம்பூர் அருகே +2 மாணவனை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10,000 லஞ்சம் கேட்ட உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் பணியிடை நீக்கம். இடத் தகராறு தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் இல்லாததால் அவரது மகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளார். எழுத்தாளர் சாலினி ஆ

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு: பிற்பகல் 1 மணி நிலவரம்:

மதுராந்தகம் – 55.18% தாராபுரம் – 57.23% தட்டாஞ்சாவடி தொகுதி (புதுச்சேரி)- 56.31% டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூபாய் 4730 கோடி ஊழல் புகார் – விசாரணை துவக்கம்.

கடந்த ஆட்சியில் 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூபாய் 4730 கோடி ஊழல் என புகார் – விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை. 28 ஆற்று மணல் குவாரிகள் மூலம் ரூ.4730 கோடி ஊழல் என 2024 ஜூன் மாதம் தமிழ்நாடு டிஜிபிக்கு ஆதாரங்களுடன் கடிதம் எழுதியது அமலாக்கதுறை. ஐஐடி கான்பூர் தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம் மணல்குவாரிகளில் ஆய்வு செய்து ஊழலை கண்டுபிடித்ததாக கூறி அமலாக்கத் துறையினர் கடிதம். நமது செய்தியாளர் பு.லூர்து ராஜேஷ்

சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்தது

சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து. 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

ரேஷன் உணவுப்பொருட்கள் கொள்முதலில் 600 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதா தவெக அரசு?

திமுக ஆட்சியில் ஒரு லிட்டர் பாமாயில் ₹136.95-க்கு வாங்கப்பட்ட நிலையில், தற்போது தவெக ஆட்சியில் அதே பாமாயில் ₹154.99-க்கு வாங்கப்படுவதன் பின்னணி என்ன? திமுக அரசு வாங்கியதை விட, ஒரு லிட்டருக்கு ரூ18.04 கூடுதலாகக் கொடுத்துத் தவெக அரசு பாமாயில் வாங்குவதன் மர்மம் என்ன? நமது செய்தியாளர் ச.பிரித்திவிராஜ்

மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு.

2026ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு கார்ல் டெய்சோர்த், பீட்டர் ஹெகிமான், ஜார்ஜ் நகேல் ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்டோஜெனிடிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிப்பு. ஒளியை பயன்படுத்தி மூளையின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கண்டுபிடிப்புக்கு மூவருக்கு அங்கீகாரம். நமது செய்தியாளர் செ.லோகநாதன் செங்கல்பட்டு

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்: ஒரு கிராமிற்கு ரூ. 10,000-தமிழக அரசு.

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ. 10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. ஏற்கெனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் இது பொருந்தும் -கூட்டுறவுத்துறை. நமது செய்தியாளர் து.அன்பு தெற்கு சென்னை