கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்: ஒரு கிராமிற்கு ரூ. 10,000-தமிழக அரசு.

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்களுக்கு ஒரு கிராமிற்கு ரூ. 10,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு. ஏற்கெனவே பெறப்பட்டு தற்பொழுது புதுப்பிக்கப்படும் நகைக் கடன்களுக்கும் இது பொருந்தும் -கூட்டுறவுத்துறை. நமது செய்தியாளர் து.அன்பு தெற்கு சென்னை

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவு. திரைப்படப் பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் நாட்டுப்புறக் கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். நமது செய்தியாளர் வி.வினோத் குமார்

ராகுல் குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையம் விளக்கம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் பதிவில் உள்ள தகவல் தவறான புரிதலை ஏற்படுத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம். பிஹார் எஸ்ஐஆர் தொடர்பான ஆணை 24.6.2025இல் ஆணையத்தால் ஒருமனதாக பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு, 27.5.2026 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் படிவம் 6 உடனான உறுதிமொழி உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது என 26.9.2026இல் அறிக்கை-இந்திய தேர்தல் ஆணையம். படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகி உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார்.… Continue reading ராகுல் குற்றச்சாட்டு; தேர்தல் ஆணையம் விளக்கம்!

சென்னையில் போராட்டம் செய்த செவிலியர்கள் கைது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் முழக்கமிட்டனர். தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டம். நமது செய்தியாளர் பெ.மோரிஸ்

மதுராந்தகம், தாராபுரதம் இடைத்தேர்தல் வாக்குபதிவு தொடக்கம்.

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. 2 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ். பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டவதற்கு எதிராக கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டத்தை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அரசுப் பணம் எப்படி வீணடிக்கப்படுகிறது? புதிய தலைமைச் செயலகம் கட்டக் கூடாது என உத்தரவிட நீதிமன்றத்துக்கு எந்த சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?-தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு கேள்வி. டாக்டர்… Continue reading புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு வாபஸ்.

ஒரே நாளில் ரூ.4.61 கோடி வசூல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் 90,292 பேர் சாமி தரிசனம். இலவச டோக்கன் பெறாத பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு 10 மணி நேரம் காத்திருந்தும், இலவச டோக்கன் பெற்ற பக்தர்கள் 4 முதல் 6 மணிநேரம் காத்திருந்தும் தரிசனம் திருப்பதியில் நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.61 கோடி வருவாய் கிடைத்துள்ளது டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

பதக்கம் வென்றவர்களுக்கு விருந்தளிக்கிறார் முதலமைச்சர் விஜய்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு விருந்தளித்து கௌரவிக்கிறார் முதலமைச்சர் விஜய். பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் உரிய மரியாதை வழங்கப்படும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. நமது செய்தியாளர் பு.லூத்து ராஜேஷ்

கொட்டித்தீர்த்த கனமழை

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 12 செ.மீ. கனமழை. கனமழையால் கோத்தகிரியில் மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம் சேதமடைந்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணி நமது செய்தியாளர் வி.வினோத் குமார்

நாளை வாக்குப்பதிவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாளை வாக்குப்பதிவு மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு இன்று அனுப்பி வைக்க ஏற்பாடு நமது செய்தியாளர் ச.பிரிததிவிராஜ்