ஒரு பேரே வரலாறு!

அவதார் பட வசூலை முந்தி உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனை படைத்தது ‘Avengers: Endgame’ 2019-ல் வெளியான படம், ‘Encore’ மறுவெளியீட்டுடன் சேர்த்து 2.925 பில்லியன் டாலரை(சுமார் ரூ.26,900 கோடி) வசூலித்து அசத்தல் நமது செய்தியாளர் க.ஏழுமலை

சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் கைது

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக இதுவரை 7 பேர் கைது – சென்னை போலீசார் பைக் ரேஸில் சிறுவர்கள் ஈடுபட்டு இருந்தால் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிப்பு. இதுபோன்ற விதி மீறல்களை 100 (அ) 90031 30103 என்ற எண்ணுக்கு புகாராக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தல். இதுவரை 56 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீசார் தெரிவிப்பு. இணை ஆசிரியர் மு.ஹிதாயத்துல்லாஹ்

தவெக சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை??

*பொதுவாழ்வில் இருப்பவர் உடல்நிலை குறித்து…* *எந்தவொரு தகவலும் இல்லை??* *ரகசியமா??* சென்னை கொளத்தூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள்… கடந்த செப்டம்பர் *9*-ம் தேதி நள்ளிரவு திடீர் மூச்சுத்திணறல் காரணமாக… சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை *(Ventilator)* சுவாசக்கருவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரின் உடல்நிலை குறித்து… தினந்தோறும் மருத்துவ அறிக்கை வெளிவந்தது. இறுதியாக, கடந்த செப்டம்பர் *22*-ம் தேதி மருத்துவ… Continue reading தவெக சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை??

மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர்

Zomato வழியாக சம்பாரன் தாபா, தங்களுக்கு வந்த உணவு துர்நாற்றத்துடன் இருந்ததாகவும், அதில் பற்களுடன் கூடிய தாடை எலும்பின் துண்டு ஒன்று இருந்ததாகவும் குற்றம் சாட்டி, உணவுப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. வாடிக்கையாளர் தனது அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்து, விநியோகிக்கப்பட்ட உணவின் தரம் மற்றும் சுகாதாரக் குறைபாடு குறித்துக் கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள், உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் மற்றும் இணையவழி உணவு ஆர்டர்களுக்கான தரச் சோதனைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளன. நமது செய்தியாளர்… Continue reading மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த ஒரு வாடிக்கையாளர்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 169 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம். 83 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஜப்பான் இரண்டாம் இடத்தையும், 39 தங்கப் பதக்கங்களுடன் தென்கொரியா 3வது இடத்தையும் பிடித்தது. 21 தங்கம், 27 வெள்ளி மற்றும் 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடம். இந்தியா சார்பில் நிறைவு விழாவில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

ஏரியில் மூழ்கி 4 சிறார்கள் உயிரிழப்பு.

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில் 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு. லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. யுவனேஷ் (10), பூஜா (13), குஷி (13) மற்றும் தேவதர்ஷன் (12) ஆகிய நால்வரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை. இணை ஆசிரியர் E.விஜயகுமார்

அரசு வேலைக்காக காத்திருப்போர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி; குரூப்-4 தேர்வு இந்த வாரத்தில் அறிவிப்பு.

லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்க்கும் குரூப்-4 தேர்வு அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படுகிறது. குரூப்-4 தேர்வு மூலம் சுமார் 10,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படலாம் என எதிர்பார்ப்பு. கடந்த 2024ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட குரூப்-4 தேர்வில் 4,662 காலிப் பணியிடங்கள் இடம்பெற்றிருந்தன. நடப்பாண்டில் குரூப்-4 தேர்வுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்தாளர் சாலினி ஆ

புதிய வகை ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியா!

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாதையை மாற்றிக்கொள்ளும் திறனுடைய புதிய வகை ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியா. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் நேரில் சென்று சோதனையைப் பார்வையிட்டார். இந்த ஏவுகணை 700 கி.மீ. ருக்கும் அதிகமான தூரம் பறந்ததாகத் தென் கொரிய ராணுவம் தகவல். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கேரளம் அரசு உத்தரவு

2006ல் கேரளம் பொதுப்பணித்துறை செயலாளராக ஞானேஷ் குமார் பணியாற்றியபோது தற்கொலை செய்த மலேசிய சிவில் பொறியாளர் கடிதத்தில் ஞானேஷ் பெயர் இருந்ததையடுத்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்படவுள்ளது டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தவெக ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைந்த ஆட்சி அல்ல-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் முதல் அமைச்சர் வரை யாருமே வாக்குறுதிகள் பற்றி பேசவில்லை; கட்டுக்கதைகளையும், பொய்களையும் நம்ப வேண்டாம் என இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதி மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்