*நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்குஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. தகவல் தொடர்பு துண்டிப்பு – மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர்… Continue reading *நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்-சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.Dr… Continue reading தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

*ஈஷா மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை தெரியவில்லை – ஜக்கி வாசுதேவ்.*

தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம்.கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்.எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் – ஜக்கி வாசுதேவ் Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாள சம்பவம்:டெல்லி செல்லும் அமைச்சர்கள்.*

நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவு.மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணை.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் ஆணை.அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரையும் டெல்லி செல்ல முதல்வர் விஜய் உத்தரவு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

வரலாற்றுப் பக்கங்கள்காலப்பயணி – “சென்னைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?”

வணக்கம் நண்பர்களே! நான் உங்கள் காலப்பயணி. ஒரு நகரத்திற்குப் பெயர் எப்படி வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?“சென்னை” என்ற பெயருக்குப் பின்னாலும் அப்படியொரு சுவாரசியமான கதை இருக்கிறது! இன்று நாம் கொஞ்சம் காலத்தைப் பின்னோக்கிப் போகலாம். இன்று பரபரப்பாக இயங்கும் சென்னை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிறிய கடற்கரைப் பகுதிகளையும் கிராமங்களையும் கொண்ட இடமாக இருந்தது. 1639ஆம் ஆண்டு, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தப் பகுதியில் நிலம் பெற்றது. அதன் பின்னர் இங்கு Fort St.… Continue reading வரலாற்றுப் பக்கங்கள்காலப்பயணி – “சென்னைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?”

தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

கண்ணாடி! ‘என்னைப் பார்த்தாலே எல்லாரும், *கண்ணாடி அழுக்கா இருக்கு!*ன்னு சொல்றாங்க. ஆனால் என்னை அழுக்காக்குறது யாருன்னு யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க!’ன்னு அது கோபமா சொல்லுது.அதைக் கேட்ட துடைப்பம் துரை உடனே,’அதான் சொல்றேன்ல! என்னையும் வாரம் ஒருமுறைதான் தேடுறாங்க!’ன்னாரு.அப்போ பிரஷ் பாலா வந்துட்டு,’என்னைப் பற்றி யாராவது பேசப் போறீங்களா? இல்ல பல் தேய்க்குற நேரத்துல மட்டும் ஞாபகம் வருவேனா?’ன்னு கேட்டார். அதற்குள் கிருமி கோபால் மெதுவா வந்து,’நீங்க எல்லாரும் சண்டை போடுங்க… நான் இங்கதான் இருக்கேன்!’ன்னு சிரிச்சான்.நான் அவனைப்… Continue reading தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

ஆலய அரங்கம்

நந்தி அண்ணன் பேசுகிறார்… “ஹர ஹர மகாதேவா! வணக்கம் வாசகர்களே! நான் உங்கள் நந்தி அண்ணன். சிவபெருமானின் அருகில் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, உலக விஷயங்கள் எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்! நம் திருத்தலங்களின் பெருமைகளைப் பற்றி நான் நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.இந்த மாதம் நாம் செல்லப் போகும் ஆலயம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடலும் கந்தனும் சங்கமிக்கும் இந்தப் புனிதத் திருத்தலத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள என்னுடன் வாருங்கள்!”கடலும் கந்தனும் சங்கமிக்கும் திருத்தலம்தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில்,… Continue reading ஆலய அரங்கம்

சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:

சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவின் முக்கியமான பகுதியாக இருந்தவை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றை உணவில் சேர்ப்பது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்வது சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகும். 🍽️ இன்றைய சமையல் – கம்பு காய்கறி அடை தேவையான பொருட்கள் செய்முறை கம்பு மாவுடன் நறுக்கிய காய்கறிகள், கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி… Continue reading சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:

சிக்கனத்தின் சிகரம்:

ஸ்விட்ச் ஆஃப் பண்ணினா, சேமிப்பு ஆன்!“பாட்டி வாசலில் உட்கார்ந்தாச்சு… வாங்க பேரப்பிள்ளைகளே, இன்றைய கதையைப் பேசலாம்.”நம்ம வீட்டுல ஒரு சின்ன விளக்கு எரியுது. பக்கத்து அறையில யாருமே இல்ல. விசிறியும் ஓடுது. டிவியும் ஓடுது. சார்ஜரும் அப்படியே மின்சாரத்தை எடுத்துக்கிட்டு இருக்கு. இதைப் பார்த்தா பாட்டிக்கு ஒரே கேள்விதான் வரும்—“தேவையில்லாததை ஏன் ஓடவிடணும்?”பிள்ளைகளே, மின்சாரம் இலவசமா வருவதில்லை. அதை உருவாக்கவும், நம்ம வீடு வரை கொண்டு வரவும் பலருடைய உழைப்பு தேவைப்படுகிறது. அதனால் நமக்குத் தேவையான அளவுக்கு… Continue reading சிக்கனத்தின் சிகரம்:

குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

‎நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‎அடையாளம்… Continue reading குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை