M-Kavach 2 என்பது மொபைல் பாதுகாப்பைச் சரிபார்க்க உதவும் செயலி. இதன் மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம்.சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் செயலிகளைக் கண்டறிவதுடன், Hidden / Sideloaded Apps மற்றும் Hardware-ஐயும் ஸ்கேன் செய்யலாம்.ஆப்ஸ்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கலாம்; WhatsApp / SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் பரிசோதிக்கலாம்.ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது-தமிழக காவல்துறை விழிப்புணர்வு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
Category: தமிழகம்
*மருத்துவ படிப்புகள் ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.*
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு முடிவுகள் இன்று வெளியாகிறதுஅரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வில் பெரும்பான்மையான இடங்கள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
*செப்டம்பர்-1: மேட்டூர் அணை திறப்பு.*
வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சரான பின் முதல் முறையாக மேட்டூருக்கு சென்று அணையை திறந்து வைக்கிறார். Drஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகளை தரமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
திருச்சி கோயில்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
*இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு*
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் “இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
உலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் இனிய ஓணம் மிலாடி நபி மனமார்ந்த வாழ்த்துக்கள்
*வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கம்.*
உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கந்தா என்றால் மராத்தியில் வெங்காயம் என்று பொருள். Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
*15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.*
தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.நாளொன்றுக்கு 1.9 TMC வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்
*பலூன் விழுங்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு*
நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துணி வியாபாரி குமார் மற்றும் சத்தியா தம்பதியரின் மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாக கூறப்படுகிறது.பலூன் தொண்டையில் மாட்டிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் மயங்கி கீழே விழுந்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை நாட்றம்பள்ளி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்ததாக கூறி தொண்டை குழியில் சிக்கியிருந்த பலூனை அகற்றினர்.