செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கருணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ‘நடுபழநி’ என்றும் பக்தர்களால் பரவலாக அழைக்கப்படுகிறது.இந்த கோவிலில் சுமார் 2 அடி உயரமுள்ள மரகத முருகன் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் பூட்டை உடைத்து விலைமதிப்பற்ற மரகத முருகன் சிலையை திருடி சென்றுள்ளனர்.
Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்