குடியிருப்பு, வணிக கட்டடம், தொழிற்சாலை மனை பிரிவுகளில் அமையும் கட்டடங்களுக்கு எளிதாக அனுமதி பெற அரசாணை.
8,070 சதுர அடி குடியிருப்பு கட்டடங்கள், 3,230 சதுர அடி வணிக கட்டடங்களுக்கு உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்லாமலேயே அனுமதி பெறலாம்.
சிட்கோ, சிப்காட், எல்காட் பிரிவுகளில் அமையும் ஆலை கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்ல தேவையில்லை.
தொழிற்சாலை மனைப் பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி கட்டடங்களுக்கு மாவட்ட அலுவலகம் செல்லாமல் அனுமதி.
மாநகராட்சி, நகராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான அதிகாரம், 10,000இல் இருந்து 16,140 சதுர அடியாக உயர்வு.
பேரூராட்சிகள், ஊராட்சிகளில் கட்டட அனுமதிக்கான அதிகாரம் 12,912 சதுர அடியாக உயர்வு.
உள்ளாட்சி அமைப்புகளில் வணிக கட்டட அனுமதிக்கான அதிகாரம் 2000இல் இருந்து 5,380 சதுர அடியாக உயர்வு – தமிழக அரசு.
நமது சட்ட ஆலோசகர்
வி.ராம்ச்சந்திரமூர்த்தி