தேனிசைத் தென்றல் தேவா காலமானார்.

பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா அவருக்கு  வயது (76) காலமானார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சூர்யா மருத்துவமனையில் மாரடைப்பால் தேவாவின் உயிர் பிரிந்தது. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.

பிளஸ் 2 பொதுத்தேர்வு 2027 மார்ச் 3 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 2027 மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. எழுத்தாளர் சாலினி ஆ

ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருவண்ணாமலையில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு. இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் 5 தினங்களில் தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

சென்னை, என்.எஸ்.கே. நகர் – அண்ணா ஆர்ச் பகுதி மின்வெட்டு

அக்டோபர் 12, 2026 – இரவு 11:00 மணி நிலவரம் சென்னை என்.எஸ்.கே. நகரில் தொடர் மின்வெட்டு: சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுப்பு – ஆம்புலன்ஸும் சிக்கித் தவிப்பு! செய்தி விவரம்: சென்னையில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையால் கொதிப்படைந்த பொதுமக்கள், என்.எஸ்.கே. நகர் அண்ணா ஆர்ட்ஸ் பகுதியில் இன்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள்… Continue reading சென்னை, என்.எஸ்.கே. நகர் – அண்ணா ஆர்ச் பகுதி மின்வெட்டு

இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை.

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக்.09) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

திருவான்மியூர் டைடல் பார்க் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்த கார்.

சென்னை திருவான்மியூரில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. மெட்ரோ பணிகள் நடந்து வரும் இடத்துக்கு அருகே சாலையில் திடீர் பள்ளம். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார் மீட்பு; பள்ளத்தில் கார் கவிழ்ந்தபோது, உள்ளே இருந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். டாக்டர் ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்.

அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு-தமிழக அரசின் அதிரடி உத்தரவு.

அனைத்து அரசு ஊழியர்களும் சொத்து விவரங்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு ஊழியர்கள் தங்களின் அசையும், அசையா சொத்துகள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட விவரங்களை வரும் 31-ம் தேதிக்குள் IFHRMS இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்குப் பதவி உயர்வு. வேறு யார் பெயரில் சொத்து வாங்கினாலும் அதையும் குறிப்பிட வேண்டும். சொத்து விவரம் அளிக்காதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர். வரும் 31-ஆம் தேதிக்குள்… Continue reading அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களைக் காட்டினால் மட்டுமே பதவி உயர்வு-தமிழக அரசின் அதிரடி உத்தரவு.