பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44ஆக வழங்கப்படும்.கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலை உயர்வு.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்-சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்.கடந்த சில நாள் முன்பு ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. துணை ஆசிரியர் A.கல்பனா

*விபத்தில் 4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதி உதவி.*

திண்டுக்கல் கொல்லப்பட்டி கிராமத்தில் பால் வேன் மோதி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.விபத்தில் 4 சிறார்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியறிந்து வருத்தமும், வேதனையுமடைந்தேன்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலை அம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு – முதலமைச்சர் விஜய். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை.*

விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 9,000 கனஅடியை 15 நாட்களுக்கு திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.உலகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்து கொள்ளலாம் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து.அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆன நிலையில் விதி வகுக்கப்பட வேண்டும்.நிபந்தனை விதிக்கப்பட்டால் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் – நீதிபதி கருத்து.-வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? -கலா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை ஆணை. Dr ஆ.ஆனந்தகுமார்… Continue reading அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

நமது பத்திரிகை ஆசிரியர் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் அவர்களுக்கு

நமது பத்திரிக்கை ஆசிரியர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது துணை ஆசிரியர் S.கண்ணன்Bcoml

அம்பேத்கரின் சமூக விளக்கு தமிழ் மாத பத்திரிகை இணையதளம் 28/08/2026 துவக்கம்…

A S V பத்திரிகை இணையதளம் நமது நிறுவனர் ஆசிரியர் வெளியீட்டாளர் Mr Dr ஆ.ஆனந்தகுமார் அவர்கள் வெளியீடு அவருக்கு அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்து பல்லாண்டு வாழ குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம எழுத்தாளர் ஆ.ஷாலினி