டாஸ்மாக் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்- 1800-889-2015 மற்றும் வாட்ஸ் அப் எண் – 7397720230 அறிவிப்பு.இனி எந்த சமரசமும் இன்றி டாஸ்மாக் நிர்வாகம் நேர்மையாக இயங்கும் என்றும் அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டம். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
Category: முக்கிய செய்தி
*காவிரியை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய்.*
காவிரித் தாயை வணங்கி மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.மேட்டூரில் காவிரி தாயை மனதார கைக்கூப்பி வணங்கி தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்.காவிரியில் பெருக்கெடுத்த தண்ணீரில் பூக்களையும், நெல்மணிகளையும் வீசி நெகிழ்ச்சி.சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், விவசாயிகளுக்கு நெல்விதைகளை வழங்கி நெகிழ்ச்சி.தண்ணீரை வரவேற்ற முதல்வருக்கு பச்சைத் துண்டை அணிவித்து மரியாதை செய்த விவசாயிகள். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*
தேவையற்ற சூழல்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க் வேண்டும்.வெளிநாட்டு பயணம் செய்வதையும் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.சுயசார்பு இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்
*தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்தது.*
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,15,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ. 14,385க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது. துணை ஆசிரியர் ஆ.கல்பனா
*26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.*
தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 77 சுங்கச்சாவடிகளில் பெரும்பான்மையான சாவடிகளில் ஏப்.1ல் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் ஆண்டுக் கட்டணம் திருத்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*மேட்டூர் அணையை இன்று திறந்துவைக்கிறார் முதல்வர்.
காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்துவைக்கிறார். இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் காரில் மேட்டூர் செல்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12இல் திறக்கப்படும் நிலையில் இம்முறை தாமதமாக திறப்பு. துணை ஆசிரியர் S.கண்ணன்
*இன்று முதல் கோயில்களில் செல்போனுக்கு தடை.
தமிழ்நாட்டில் 52 பெரிய கோயில்களில் செல்போன்களை எடுத்துச் செல்ல இன்று முதல் தடை விதிப்பு அமலாகிறது. செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க, கோயில் வளாகத்தில் செல்போன் பாதுகாப்பு பெட்டக வசதிக்கு ஏற்பாடு. இணை ஆசிரியர் Dr எஸ்.நாடிமுத்து
*வணிக சிலிண்டர் விலை சிறிது உயர்வு.*
சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்ந்து, ரூ.2,916.50க்கு விற்பனை.வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50ஆக தொடர்கிறது. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.ஓய்வு முடிவு எனது உள்ளத்தை மிகவும் காயப்படுத்துகிறது; எனினும் இதுவே சரியான தருணம். காலப்போக்கில் சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரும்; அப்படி எனது இந்த அத்தியாயம் முடிவுக்கு வருகிறது – சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அர்ஜென்டினா நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி உருக்கம்.பலமுறை ஆழமாக சிந்தித்து, அர்ஜென்டினா தேசிய அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கால்பந்து வாய்ப்புகாக பல… Continue reading *சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஜாம்பவான் மெஸ்ஸி!*
முக்கிய செய்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான் – சென்னை உயர்நீதிமன்றம்.
கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதானே தவிர, அரசமைப்பு நியமனத் திட்டம் அல்ல.“கருணை அடிப்படையில் அரசுப் பணி என்பது சலுகையே தவிர, அரசியல் சாசன விதி அல்ல; எந்த தகுதியும் பார்க்காமல் பணி வழங்குவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது”உயிரிழந்த அரசு ஊழியரின் மகளுக்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி வழங்க, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து.தகுதியான குடும்பத்தினரே கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதை உறுதி செய்ய,… Continue reading முக்கிய செய்தி கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகைதான் – சென்னை உயர்நீதிமன்றம்.