*மேட்டூர் அணையை இன்று திறந்துவைக்கிறார் முதல்வர்.

காவிரி படுகை பாசனத்திற்காக சேலம் மேட்டூர் அணையை முதல்வர் விஜய் இன்று திறந்துவைக்கிறார். இன்று முதல் 45 நாள்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் காரில் மேட்டூர் செல்கிறார். மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12இல் திறக்கப்படும் நிலையில் இம்முறை தாமதமாக திறப்பு. துணை ஆசிரியர் S.கண்ணன்

*அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா… Continue reading *அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு – டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு. இணை ஆசிரியர் இ.விஜயகுமார்

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44ஆக வழங்கப்படும்.கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலை உயர்வு.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்-சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்.கடந்த சில நாள் முன்பு ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்குஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. தகவல் தொடர்பு துண்டிப்பு – மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர்… Continue reading *நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*

தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்-சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.Dr… Continue reading தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.

*ஈஷா மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை தெரியவில்லை – ஜக்கி வாசுதேவ்.*

தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம்.கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்.எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் – ஜக்கி வாசுதேவ் Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*செப்டம்பர்-1: மேட்டூர் அணை திறப்பு.*

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சரான பின் முதல் முறையாக மேட்டூருக்கு சென்று அணையை திறந்து வைக்கிறார். Drஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உள்ளது – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

காவிரி நீரில் தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை பெற உரிமை உள்ளது. காவிரி விவகாரம் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தமிழகத்தின் தேவைக்காக பயன்பட வேண்டும் என்பதே நோக்கம். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் உறுதி. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உருவாக்க கர்நாடக அரசு முயற்சி-கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

*இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு*

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் “இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்