சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிரதாப் என்பவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி மெ.மெ. வீதியில் உள்ள RMR துணிக்கடை வாசல் பகுதியில் நேற்று இரவு பிரதாப் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பிரதாப் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து, அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பிரதாப்பை காரைக்குடி தெற்கு காவல் துறையினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மக்கள் அதிகம் கூடும் RMR துணிக்கடை வாசல் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது செய்தியாளர் செ.லோகநாதன் செங்கல்பட்டு