சென்னை, என்.எஸ்.கே. நகர் – அண்ணா ஆர்ச் பகுதி மின்வெட்டு

அக்டோபர் 12, 2026 – இரவு 11:00 மணி நிலவரம்
சென்னை என்.எஸ்.கே. நகரில் தொடர் மின்வெட்டு: சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுப்பு – ஆம்புலன்ஸும் சிக்கித் தவிப்பு!
செய்தி விவரம்:
சென்னையில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினையால் கொதிப்படைந்த பொதுமக்கள், என்.எஸ்.கே. நகர் அண்ணா ஆர்ட்ஸ் பகுதியில் இன்று இரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சாலையில் பயணம் செய்வோர் மற்றும் பொதுமக்களும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, நோயாளிகளுடன் சென்ற ஆம்புலன்ஸ் போன்ற அவசர ஊர்திகளும் இந்த
மறியலில் மாட்டித் தவித்தன.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
நமது செய்தியாளர்
ப.நெடுமாறன்,
நமது புகைப்படக் கலைஞர்
க.ஏழுமலை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *