மொத்தம் 6,574 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.
குரூப் 4 தேர்வுகள் 2027 ஜனவரி 10 அன்று காலை 9.30 மணி முதல், பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
இன்று முதல், நவம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
பெரும்பாலான பணிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி.
சில பணிகளுக்கு பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பணிகளுக்கு வயது வரம்பு 18 முதல் 30 வரை.
ஒரே கட்ட எழுத்துத் தேர்வு அடிப்படையில் தரவரிசை; தகுதியானவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.
வனத்துறை பணிகளுக்கு உடற்தகுதி மற்றும் சகிப்புத்தன்மைத் தேர்வும் உள்ளது.
விண்ணப்பிக்க: www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in
-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
எழுத்தாளர் சாலினி ஆ