*நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரிப்பு*

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை 55 பேரின் உடல்கள் மீட்கபட்டுள்ளது. காத்மாண்டுவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் ஆயுதப்படை முகாம் அருகே 20 தமிழர்கள் தஞ்சமடைந்துள்ளனர்.”

*இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் காங்கிரசார் கொதிப்பு*

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் “இன்றைய முதல்வர் நாளைய பிரதமர் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுக்கப்பட்டது

கர்நாடகவில் யாசகம் பெற்று வாழ்ந்து மூதாட்டி இறந்ததை அடுத்து அவரது வீட்டை ஆராய்ந்து போது 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்க பணம் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிப்புமசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வந்த உன்னிசாவின்(68) மறைவை அடுத்து இந்த பணத்தை அவரது சகோதரர்களுக்கு மசூதி நிர்வாகித்தினர் பிரித்து கொடுத்தனர் Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ ரயில் இயக்கம்.*

உள்நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கந்தா என்றால் மராத்தியில் வெங்காயம் என்று பொருள். Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.*

தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.நாளொன்றுக்கு 1.9 TMC வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிப்பு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*பலூன் விழுங்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு*

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துணி வியாபாரி குமார் மற்றும் சத்தியா தம்பதியரின் மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாக கூறப்படுகிறது.பலூன் தொண்டையில் மாட்டிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் மயங்கி கீழே விழுந்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை நாட்றம்பள்ளி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்ததாக கூறி தொண்டை குழியில் சிக்கியிருந்த பலூனை அகற்றினர்.

*ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பேரவையில் அரசினர் தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் ராஜ்மோகன்.*

2010 ஆகஸ்ட் 23க்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட ஆசியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு வேண்டும். இதற்கு ஒன்றிய அரசு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவால், பணியில் உள்ள ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகியுள்ளதால், பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் கொண்டு வந்த பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன். Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர் அரசியல் களம்

*503 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்தியா.*

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி. முதல் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி தடுமாற்றம். Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்